Welcome to Pasumai Nallur

பர்த்டே அல்ல பிறந்தநாள் விழா


தமிழரின் பாரம்பரியத்தை நம் வீட்டு குழந்தைகளின் பிறந்தநாள்விழா முலமாக பாதுகாப்பது எப்படி என எழதுவது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஏனெனில் இப்போது எல்லாம் கதர் ஆடை அணிவதும், தமிழில் எழதுவதும், பேசுவதும் கூட நமது ஊர்களில் காணாததைகண்ட புதுமை காட்சியாய் போய்விட்டது. 
எந்த ஒரு மனிதசமுகம் தன்மொழியையும், பாரம்பரிய பழக்கவழக்கங்ககளையும் மறக்கிறதோ அந்த நொடியே அதன் அழிவு ஆரம்பமமாகி அந்தசமுகம் கூடியவிரைவில் மண்ணுடன் மண்ணாய் மறைந்துவிடும் (மூடபழக்கவழக்கங்கள் இந்த தொகுப்பில் வரா, பலர் அதைத்தான் பாரம்பரியமாக பின்பற்றுகிறார்கள்). அப்படி நடவாமல் இருக்க எடுக்கும் சிறுமுயற்சிதான் இது.

பசுமைநல்லூர் சார்பாக கொண்டாடப்பட்ட "பாரம்பரியம் காக்கும் பிறந்தநாள்" விழாவினை பற்றி விரிவாக காண்போம்

௧) தேன்தமிழில் வரவேற்பு மடல் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தில் அச்சடித்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டது.
௨) விழாவிற்கு வந்த அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர்.
௩) குழந்தையின் பெற்றோர் புன்னகையுடன் இருகரம்கூப்பி வணக்கம் தெரிவித்து வரவேற்றனர்
௪) பெற்றோரும், மற்றோரும் குழந்தையை போற்றி, வாழ்த்தி தமிழில் கவிதை எழுதினர்.
௫) அரசியல்வாதிகள்போல சுவரோட்டிகளை ஒட்டாமல் திருக்குறளையும், பாரதி மற்றும் பாரதிதாசனின் வரிகளை மணிமணியாய் வருவோர் கண்களில் படும்படி வைக்கபட்டது.
௬) வந்தோர் அனைவரும் சர்க்கரை தண்ணிபோல் காபி/ டீ அருந்தாமல் சுக்கு, கருப்பட்டியை சுடுநீரில் கலந்து இதமாக, நலமான பானம் அருந்த கொடுக்கபட்டது.
௭) மனிதகுலம் வாழ, மிளிர குழந்தையும், குதுகுலமான குடும்பத்துடன் குத்துவிளக்கு ஏற்றி விழா தொடங்கிவைக்கப்பட்டது.
௮) இருவழி தாத்தா, பாட்டிகளும் (அம்மத்தா, அப்பிச்சி, அப்பத்தா, அப்பாரு) குழந்தை-இன் உட்சிகுளிர முத்தமிட்டு வாழ்த்தச்சொல்லினர்.
௯) கேக்கு வெட்டி கலர்கலராய் மிட்டாய் கொடுப்பத்தை தவிர்த்து பருப்பு, தானியங்கள் கலந்த இனியமாவு இனிப்பாக கொடுக்கபட்டது.
௰) சினிமா குத்துப்பாட்டு தவிர்த்து மகிழ்ச்சிதரும் சிறார்களின் பாடல்களும் மற்றும் பாரதியின் பாடல்க ளும்  காற்றில் தவழ விடப்பட்டது.
௧௧) அழைக்கப்பட்ட நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் தங்கள் கைபேசிக்கு முழுவதுமாக கைவிலங்கு அளித்துவிட்டு குழந்தையின் கள்ளகபடம் அற்ற குருகுருப்பான பேச்சில் மயங்கி, கொஞ்சி பேசி விளையாடினர்.
௧௨) ஊக்கம் ஊட்டும் புன்னகையும், புத்தகங்களையும் மட்டும் பரிசாக குழந்தைக்கு பரிசாக கொடுக்கப்பட்டது.
௧௩) குழந்தையின் பிஞ்சுகையால் பலதலைமுறை வாழும் மரகன்றுகள் நடப்பட்டது.
௧௪) மேலும் விருந்தினருக்கு எண்ணற்ற நட்பையும், உறவையும் மேம்படுத்தும் சுலபமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
௧௫) வந்தர விருந்தினருக்கு மரகன்றுகளை மற்றும் சுற்றுசூழல் காக்க உதவும் துணிபைகளில் கொடுக்கப்பட்டது.

உணவு
௧) கச்சாயமும், கல்லைஉருண்டையும் இனிப்பாகக்கொடுக்கப்பட்டது.
௨) அன்றுகறந்த மாடு/ ஆட்டு பாலில், சர்க்கரை கலக்காமல் வெதுவெதுப்பாகக் கொடுக்கப்பட்டது.
௩) பாசிப்பயிர் கடைந்து களிசாதத்துடன் சாப்பிடக்கொடுக்கப்பட்டது.
௪)அரசிமுருக்கையும், முருங்கைகாயையும், எண்ணெய்படாமல் வருத்த கீரையுடன் அத்துடன் கடிக்கக்கொடுக்கப்பட்டது..
௫)மற்றும்  உடலுக்கு மிகவும் நல்ல பலவகையான பாரம்பரியஉணவுகளான சோள/கம்பு தோசை, ராகிசேவை, மக்காசோள பணியாரம், கம்பு தயிர்சாதமும் கொடுக்கப்பட்டது.
௬) நல்லதொரு பானமான மோரும், இளநீரும் அருந்தகொடுக்கப்பட்டது.



இந்தமாதிரி சிறுசிறு முயற்சிகள்தான் நாளைய சமூகத்திற்கு அடித்தளம். உங்கள் வீடுகளில் இது போன்று நடத்த உதவி வேண்டுமா? பசுமைநல்லூரை தொடர்பு கொள்ளுங்கள் (0-98432-32229/0-99436-32229 மற்றும் pasumainallur@gmail.com)





தொடக்கபள்ளியும் பசுமைநல்லூரும்



பள்ளி சென்ற பசுமைநினைவுகள் ஞாபகம் உள்ளதா?

காடு, தோட்ட வரப்பு தாண்டி கணிதம் கற்ற பள்ளி நினைவுகள் ஞாபகம் உள்ளதா?

மின்சாரம் இல்லாமல் மண்ணெண்ணெய் விளக்கேற்றி மனம் செய்த பள்ளி நினைவுகள் ஞாபகம் உள்ளதா?

கருப்புவெள்ளை டிவி-ல் படம் பார்த்து பாடம் மறந்த பள்ளி நினைவுகள் ஞாபகம் உள்ளதா?

அம்மா கோடுத்த எட்டு அணாவில், நாலு அணா சேமித்த பள்ளி நினைவுகள் ஞாபகம் உள்ளதா?

கை நிறைய எண்ணெய் ஊற்றி, தலைவாரி புகைப்படம் எடுத்துகொண்ட பள்ளி நினைவுகள் ஞாபகம் உள்ளதா?

பள்ளிவிட்டு வரும்போது பெய்த மழையில் நனைந்த பள்ளி நினைவுகள் ஞாபகம் உள்ளதா?

தேர்வு வரும்பொழுது எல்லாம் நல்லமதிப்பெண் சாமி கும்பிட்ட பள்ளி நினைவுகள் ஞாபகம் உள்ளதா?

தேர்வு முடிந்தபின்உற்றார், உறவினர் வீடு செல்ல காத்திருந்த பள்ளி நினைவுகள் ஞாபகம் உள்ளதா?

இப்படிபட்ட நினைவுகளை சுமந்திருக்கும் நாம் படித்த பள்ளியை ஞாபகம் உள்ளதா?

இனிமேல் நேரம் கிடைத்தால் நாம் பயின்ற தொடக்கபள்ளிக்கு சென்று வாருங்கள்!

பசுமைநல்லுரையும் , எதிர்காலஉலகையும் உருவாக்கும் கபடமற்ற கண்மணிகள் அங்குதான்
நம் வரவையும், ஊட்குவிப்பயும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன!!!


ஆம் பசுமைநல்லுரையும் , எதிர்காலஉலகையும் உருவாக்கும் கபடமற்ற கண்மணிகள் அங்குதான்
நம் வரவையும், ஊட்குவிப்பயும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன!!!


இன்னும் சில ஆண்டுகளில் தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்குமா?



 நீரின்றி அமையா உலகுஎன்று அனைவருக்கும் தண்ணீரின் அருமை தெரியும்.    முன்புதண்ணீர் விலைக்கு விற்கப்படுகிறதுஎன  செய்தி வந்தால் அது ஒரு விசித்திரமான நிகழ்வாக இருக்கும்

னால் தற்போது நிலைமயே வேறு, தண்ணீர் விலைக்கு வாங்கும் நிலைக்கு உட்பட்டுஉள்ளோம். ஆயினும் நம்மிடையே தண்ணீரைப் ஏதாவது விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறதா என யோசித்தால் வாயளவில்தான் உள்ளது. தண்ணீர் எத்தனையோ கிராமப்புற மக்களுக்கு கிடைக்காத நிலை இருக்கிறது. விரைவிலேயே தண்ணீருக்காகவும்,பெட்ரொலுக்காகவும் போர்கள் ஏற்படும் அபாயம் காத்துள்ளது.பெட்ரோலை இப்போது நாம் தினம் ,தினம் லட்சக்கணக்கான பீப்பாய்கள் எடுத்து பூமியை வெற்றுரு்ண்டையாக்கி வருகிறோம்.அதேபோல் லாரி,லாரியாக தண்ணீரை எடுத்து நிலத்தடி நீர்சேமிப்பையே இல்லாமல் ஆக்கிவருகிறோம்.

சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், “உலக தட்பவெப்ப மாற்றம் மற்றும் உள்நாட்டு மக்கள் தொகை பெருக்கம் ஆகிய காரணங்களால் இந்தியா தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும். இது, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய மற்றும் எதிர்பாராத அளவிற்கு உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தும்.இந்தியாவிற்கு 700 பில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில், 85 சதவீதம் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த தேவை 2030ம் ஆண்டில், மக்கள் தொகை அதிகரிப்பால், இரண்டு மடங்காக அதிகரிக்கும். 2030ம் ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகை, 120 கோடியில் இருந்து 160 கோடி அல்லது 170 கோடியாக அதிகரிக்கும். அதேபோல், தண்ணீர் தேவையும், இருமடங்கு, அதாவது 1,498 பில்லியன் கியூபிக் மீட்டராக அதிகரிக்கும். ஆனால், தண்ணீர் அளிப்பு 744 மில்லியன் கியூபிக் லிட்டர்களாக இருக்கும். தேவையில் பாதியளவு பற்றாக்குறையாக இருக்கும்என்பது தெரிய வந்துள்ளது.

குளம்,குட்டை போன்ற நீர்சேமிப்பு ஆதாரங்களையும் பட்ட போட்டு கான்கீரிட் காடுகளாக ,குடியிருப்பு மேடுகளாக ஆக்கிவருகிறோம். விவசாய நிலங்களைக்கூட விட்டு வைக்காமல் வேளாண்பரப்பையே சுருக்கி விட்டோம். முன்ப வீடுகளைச் சுற்றி மரங்கள்,செடிகள் வளர்ப்பார்கள். மணல் இருப்பதால் மழை நீர் சேகரிக்கப் படும். இப்போதோ கொஞ்சம் இடம் இருந்தால் கடை,வீடு அல்லது வீட்டைச் சுற்றி கான்கிரீட் போட்டு மெழுகி விடுகிறார்கள்.ஒரு சொட்டு மழை நீர் கூட கீழே பூமிக்குச் செல்லவிடாமல் செய்து விடுகிறார்கள்.பின் எப்படி மழை நீர் சேகரிப்பு ஏற்படும்.

தண்ணீர் சேமிப்பு முறைகளைக் கையாளவில்லையென்றால் எதிர்காலத்தில் நம் பிள்ளைகள்தான் பாதிக்கப்படுவர். வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் 50 விழுக்காடு குளியலுக்கும், சமையல் அறையில் கழுவுவதற்கும் செலவிடப்படுகிறது. பெட்ரோலை நாம் மீண்டும் பூமியில் ச்ந்கரிக்க முடியாது.அது இயற்கை பல்லாண்டுகளாக பல்வேறு நிலைகளில் உருவாக்கியது.ஆனால் தண்ணீரை நாம் சேகரிக்க இயலும். ஆகையால் குழந்தைகளுக்கு தண்ணீர் சேமிப்பைப்பற்றி அவசியம் அனைத்துப்பள்ளிகளிலும், வீட்டில் பெற்றோர்களும் சொல்லித்தரவேண்டும். அனைத்து கிராமங்கள், குடியிருப்புகள், நகரங்கள், புறநகர்ப்பகுதிகளிலும் நிலத்தடி நீர்வளத்தை பெருக்குதற்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும். நகரமயமாக்கலால், குளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குளங்களும் அழிந்து வரும் நிலை உள்ளது. குளங்களை முறையாக பராமரிக்காவிட்டால் பற்றாக்குறை அதிகரிக்கும். ஒரு குளம் முறையாக பராமரிக்கப்படுவதால், ஒரு கி.மீ., தூரத்தில், 300 கிணறுகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து இருக்கும். தண்ணீர் வளத்தை அதிகரிக்க, கிராமப்பகுதிகளில் உள்ள குளங்களை தூர்வாரி பராமரிக்க வேண்டும். சொட்டு நீர் பாசனத்தை பின்பற்றும்போது 40 சதவீத தண்ணீரை மிச்சப்படுத்தலாம்; மகசூலும் கணிசமாக அதிகரிக்கும்



Do you know our mother earth is crying?


But you can help her and bring smile by the following initiatives
  • Recycling
  • Using energy efficient lightbulbs
  • Turing down the heat/air-conditioning
  • Minimizing driving and air travelling
  • Buying and eating local to minimize food miles
  • Buying recycled/biodegradable/ green paper or household products.
  • Energy efficient appliances
  • Purchasing fewer things
  • Eating organic, vegetarian or vegan or less meat.
  • Minimizing water usage
  • Voting for policy changes
  • Reusing what you have
  • Supporting or donating to environmental causes
  • Energy efficient windows
  • Taking public transportation often
  • Installing alternative energy in your home or business

See, now she is smiling ….



நாங்கள் துணிப்பைக்கு மாறிவிட்டோம். அப்ப நீங்கள்?


உபயோகிக்க எளிது, உடையாது. இந்த இரு காரணிகளால் ப்ளாஸ்டிக் அனைவராலும் பெரும் வரவேற்பிற்கு ஆளானது

இப்படித்தான் ப்ளாஸ்டிக் நம்ம வாழ்க்கையில கொஞ்சம் கொஞ்சமா நுழைஞ்சு நம்மை ஆக்கிரமிச்சிக்கிட்டிருக்கு. உதவி செய்யறமாதிரி நைஸா வந்து இப்ப நமக்கே எமனா ஆகியிருக்கு. எப்பொழுது டீ கப்புகள் மற்றும் கேரி பேக்குகள் வந்ததோ அப்போது பிடித்தது வினை. முக்கியமான தேவைகளுக்காக உற்பத்தி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கைவிட, பாலிதீன் பைகளை உற்பத்தி செய்ய ஆரம்பிச்சப்பதான் எங்கும் பிளாஸ்டிக்.. எதிலும் பிளாஸ்டிக்ன்னு ஆகிப்போச்சு

இந்த பிளாஸ்டிக்கை உற்பத்தி செய்ய தேவையான மூலப்பொருள் எது தெரியுமா சாட்சாத் பெட்ரோலியமேதான். உலகத்துல இப்ப பெட்ரோலியத்துக்கு ரொம்பவே தட்டுப்பாடு இருக்குது. இந்த நிலையில், ஒவ்வொருமுறையும் நீங்க பிளாஸ்டிக்கை தூக்கிப்போடும்போதும் ஒரு முக்கியமான எரிசக்தியை வீணாக்குறீங்கன்னு ஞாபகப்படுத்திக்கோங்க.  

அன்றாடம் நாம் உபயோகித்து தூக்கி எறியும் இவ்வகை ப்ளாஸ்டிக் பைகள் அவ்வளவு சீக்கிரம் அழிந்து போவதில்லை, மாறாக மண்ணிலேயெ தங்கி முதல் காரியமாக மழைத் தண்ணீர் பூமிக்குள் போகாமல் தடுக்கிறது. இதனால் என்னதான் மழை பொழிந்தாலும் மண்ணுக்குள் நீர் புகமுடியாமல் தடுத்து விடுகிறது. விளைவு? நிலத்தடி நீரின் அளவு தாழ்ந்து கொண்டே போவதற்கு இந்த ப்ளாஸ்டிக் பைகளும் ஒரு பெரிய காரணமாக விளங்குகிறது. இதோடு நில்லாமல் இந்த ப்ளாஸ்டிக் பைகளை இரை என நினைத்து முழுங்கும் பறவைகளும், விலங்கினங்களும், கடல் வாழ் உயிரினங்களும் அநியாயமாக இறக்கின்றன.

நம் வீட்டில் நிறைய ப்ளாஸ்டிக் பொருட்கள் இருக்கும் ஆனால் ப்ளாஸ்டிக்கில் பல வகைகள் இருக்கின்றன. எல்லாவற்றையும் எல்லா இடங்களிலும் உபயோகப்படுத்த முடியாது. இதனை சுலபமாக அறிய என்ன வழி? எல்லா பிளாஸ்டிக்குமே மறுசுழற்சி செய்ய ஏத்தவை அல்ல. அதன் தன்மையைப்பொறுத்து ஏழு வகைகளா பிரிச்சிருக்காங்க. ஒவ்வொரு பொருட்களிலும் அதன் வகைக்குண்டான நம்பரை பொறிச்சிருப்பாங்க.

பிலாஸ்டிக் பாட்டில்களின் அடியில் முக்கோன வடிவமிட்டு அதன் உள்ளே ஒரு எண் இருக்கும். ("Resin identification code" - 1 முதல் 7 வரை) இந்த எண் அந்த பிலாஸ்டிகின் தரம், அதில் பயன்படுத்தப்பட்ட பாலிமர்(Type of polymer) தரத்தை குறிக்கும் [ப்ளாஸ்டிக்கிற்கும் ரீ-சைக்கிள் (மறுசுழர்ச்சி) முறையில் உருக்கி மறு பயன்பாட்டிற்காக பிரித்தறிய ஒரு எண் கொடுப்பார்கள்]. இந்த எண்ணை வைத்து என்ன விதமான ப்ளாஸ்டிக் மேலும் எதற்க்காக உபயோகப்படுத்தலாம் என அறியலாம்.

- பெட் பாட்டில்கள் (PET)
இது பொதுவாக நாம் உபயோகப்படுத்தும் குளிர்பானம், தண்ணீர் எல்லா பாட்டிலும் PET எனப்படும் இந்த வகை ப்ளாஸ்டிக்கினால் ஆனதுதான்.



2-  HDPE (High density Poly ethylene)

லிக்விட் டிடர்ஜெண்ட், ஷாம்பூக்கள், பைகள், தண்ணீர், ஷாம்பூ, மோட்டார் ஆயில்கள், ஜூஸ் மற்றும் பால் போன்றவை இதில் அடைக்கப்பட்டு வருது


3 – PVC ( Poly vinyl chloride)
சமையல் எண்ணெய், வீடு சுத்தம் செய்ய பயன்படும் க்ளீனர்கள், டிடர்ஜெண்ட், உணவு பேக் செய்யப்படும் பொருள் போன்றவை இதில் பாக் செய்யப்படுது.மற்றும் குழாய்கள், மருத்துவ உபகரணங்களும் இதில் தயார்செய்யப்படுது. உடலுக்கு பல வித தீங்குகளை விளைவிக்க கூடியது. Dioxin போன்ற பல நச்சு வாயுக்களை வெளிப்படுத்த கூடியது. சூடான பொருட்களை இதில் வைக்க கூடாது.


4- LDPE ( Low Density poly ethylene)
உறையவைக்கப்பட்ட உணவுகள், ப்ரெட், இதெல்லாம் பொதிஞ்சு வருது. மேலும் கார்ப்பெட்டுகள், ஷாப்பிங் பைகளும் இதில் தயாரிக்கப்படுது. இந்த எண் உடைய ப்ளாஸ்டிக்குகள் ப்ரிஜ்ஜில் ( ப்ரீஸரில்)  உபயோகப்படுத்த ஏற்றது


5  – Poly propylene
சிரப், கெச்சப், மருந்துபாட்டில்கள்,யோகர்ட் டப்பாக்கள் இதில் தயாரிக்கப்படுது. குழந்தைகளுக்கான பாட்டில், சூடான பொருட்கள் வைக்க, மற்ற பொதுவான உணவு பண்டங்கள் வைக்க ஏற்றது. மைக்ரோ வேவிலும் உபயோக படுத்தலாம்.


6 – Polystyrene
சிடி உறைகள், டிஸ்போசபிள் தட்டுகள், கப்புகள், பானங்களுக்கான ஸ்ட்ராக்கள் தயாரிக்கப்படுது.


7 – Others
குறிப்பிட்டு வகைப்படுத்த முடியாது. ஆனாலும் உபயோகப்படுத்தும் போது கவனம் தேவை. இதில் கம்ப்யூட்டர் பாகங்கள், குளிர்கண்ணாடிகள், வாட்டர் பாட்டில்கள், ஐபாட், நைலான் போன்றவை அடங்கும்.


தூக்கி எறிந்து விடக்கூடிய ப்ளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை பல இடங்களில் எழுத்தளவில் மட்டுமே உள்ளது. பிளாஸ்டிக் இன்றி வாழ முடியாது. இருப்பினும் பயன்பாடு அதிகம் உள்ள இடங்களில் மட்டுமே நாம் பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்த வேண்டும். அதாவது யூஸ் & த்ரோ என்னும் கலாசசாரத்தினை விட்டொழிக்க வேண்டும்.

நீங்கள் தண்ணீர் கொண்டு செல்லும் பிலாஸ்டிக் பாட்டிலின் கீழே உள்ள எண் 5 முதல் 7 வரை (Food grade plastics) இருந்தால் நிச்சயம் உங்கள் நீரும், அதை குடிக்கும் உங்கள் ஆரோக்கியமும் பாதுகாப்பாக உள்ளது. காரணம் 1- 4 வரை எண் உள்ள பாட்டில்கள் உணவு எடுத்து செல்லும் தகுதி உடையவை அல்லஉணவு பொருட்கள் கொண்டு செல்லும் பிலாஸ்டிக்குகள் (தண்ணீர், உணவு, பழம், காய்கறிகள் எதுவாக இருந்தாலும் சரி) எப்போதும் 5 - 6 வரை எண் கொண்ட பிளாஸ்டிக்கா என பார்த்து வாங்குங்கள்(Food Grade Plastic). 1 - 4 எண் கொண்டவை உணவு கொண்டு செல்ல தகுதியானவை அல்ல. அவை வெப்ப சூழல் மாறும் போது கார்சினோஜென் (Carcinogens) எனப்படும் ஒன்றை வெளியிடுவதால் அதில் உள்ள உணவை உண்பவருக்கு புற்றுநோய் (Cancer) ஏற்பட காரணமாகிறது.


கடைகளுக்கு போகும்போது தயங்காம துணி, சணல், கான்வாஸ் பைகளை எடுத்துப்போங்க. அவங்க பாலிதீன் பைகளை கொடுத்தா தலையை இடமும் வலமும் ஆட்டுங்க. உடம்புக்கும் சுற்றுப்புறத்துக்கும் ஆரோக்கியமான பயிற்சி அதுஎண்பதுகளின் ஆரம்பம்வரை, கிராமங்களில் மட்டுமன்றி நகரங்களிலும் எல்லோர் வீட்டிலும் நீக்கமற நிறைந்திருந்தது இந்த மஞ்சள் பை. தாம்பூலப் பையில் ஆரம்பித்து, மளிகை, ஜவுளி, மொத்த மற்றும் சில்லரை அரிசி வியாபாரம், என்ற விளம்பரத்துடன் கூடிய இந்தப் பை இலவசமாகவே எல்லோருக்கும் கிடைத்தது. கடைக்கு காய்கறி வாங்க செல்லும்போது மறக்காமல் பை எடுத்து செல்லலாம். அந்த பை கூட பிளாஸ்டிக்காக இருப்பதில் தவறேதும் இல்லை. ஆனால் தினமும் அந்த பிளாஸ்டிக் பையினை உபயோகப்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும். டீ வாங்கும் சமயம் கண்ணாடி டம்ளரில் நன்கு வென்னீரில் கழுவி டீ வாங்கி குடிக்கலாம். இதன் மூலம் மட்டுமே சுற்றுச்சுழல் மாசடைவதை தடுக்க இயலும்.


கூடிய வரை மரக்கன்றுகள் நடலாம்ம்,  கூடிய வரை மரக்கன்றுகள் நடலாம். தயங்காம துணி, சணல், கான்வாஸ் பைகளை பயன்படுத்தலாம் !!!



பாரதியார் கண்ட பசுமைநல்லூர்

இவ்வுலகம் இனியது
இதிலுள்ள வான் இனிமையுடைத்து
காற்றும் இனிது
தீ இனிது
நீர் இனிது
நிலம் இனிது
ஞாயிறு நன்று
திங்களும் நன்று
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன
மழை இனிது
மின்னல் இனிது
இடி இனிது
கடல் இனிது
மலை இனிது
காடு நன்று
ஆறுகள் இனியன
லோகமும் மரமும் செடியும், கொடியும்
மலரும், காயும், கனியும் இனியன
பறவைகள் இனிய
ஊர்வனவும் நல்லன
விலங்குகளெல்லாம் இனியவை
மனிதர் 'மிகவும் இனியர்....



PasumaiNallur - Blood Donation Camp Report (11th December 2011)

Event : Blood Donation Camp

Date : 11th December 2011 [Sunday]

Time : 08.00 am - 02.00 pm

Venue : Nallurpalayam



Intended for the service of humanity on the great occasion of Mahakavi Subramanya Bharathiyar’s 129th birthday (11th December 2011) blood donation camp was organized by Pasumai Nallur at Nallurpalayam, in collaboration with Tiruppur government hospital and Muyarchi People's Trust.

The programme started with a formal welcome by the Pasumai Nallur members to all the delegates, donors, and friends of Pasumai Nallur.  The camp was inaugurated by Thiru N.S.Palanisamy (Ex.M.L.A). Further, Thiru Sundaramoorthy (Founder of Sindhanai Sirpigal), Thiru Vijayakumar (Tamilosai Pathippagam), Thiru Palanisamy (Vikatan, Palladam area reporter), Kongumen magazine publisher and representatives from National Institute of Fashion Technology (NIFT), Tiruppur were also present on this special event. 

We are thankful to the Blood Bank for agreeing to come forward  to support our event. The doctors and the staff of the blood bank extended their fullest cooperation to make the camp a success. All participants were initially given awareness about the significance of blood donation and day to day requirements of human blood of various groups.


As many as 50 donors were actively participated in the camp and 52 units of blood were collected. After the successful blood donation, all the donors were provided with refreshments. The donor’s contribution was appreciated and acknowledged by distributing tree sapling and eco-friendly cotton bags to them for their humanity towards society. For many donors, it was the first experience of donating blood, so a sense of satisfaction was clearly visible as they were contributing towards a noble cause.

We thank you all, from the bottom of our hearts for your friendship, love and support for great and successful event.

We hope this camp will motivate and inspire more people to participate in social initiatives in the future.

- Team Pasumai Nallur, Nallurpalayam