இரத்ததானம்
அல்லது குருதிக் கொடை (blood donation) என்பது ஒருவர் தனது
இரத்தத்தை பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும்.
அறுவைச்
சிகிச்சையின் போதும், விபத்தின் போதும்,
குறைப்பிரசத்தில் பிறந்த குழந்தைகள், பெரிய
அறுவைசிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள் அல்லது ஏதாவது ஒரு
வழியில் ஒருவருக்கு ஏற்படும் இரத்த இழப்பை ஈடு
செய்து அவருடைய உயிரைக் காக்கும்
பொருட்டு இரத்த தானம் தேவைப்படுகிறது.
அடிபட்ட, இரத்தசோகையினால் பாதிக்கப்பட்ட மற்றும் மற்ற அறுவைசிகிச்சைக்குள்ளாகும்
நோயாளிகளுக்கு இரத்த சிவப்பணுக்கள் மட்டும்
தேவைப்படுகிறது. அத்தகைய இரத்தச்சிவப்பணுக்கள் தானம் கொடுத்த
உங்கள் இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன.
ஒவ்வொரு
இரண்டு நிமிடத்திற்கும் யாராவது சிலருக்கு இரத்தம்
தேவைப்படுகிறது. சிலசமயம் உங்கள் இரத்தம் ஒரு
உயிரை விட மேலனதாக ஆகிவிடும்.
ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம்
உள்ளது. இரத்த தானம் செய்பவர்
ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம்
வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின்
அளவு இரண்டே வாரங்களில் நாம்
உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும்
உற்பத்தியாகிவிடும். 3 மாதங்களுக்கு ஒரு முறை எந்த
வித பாதிப்பும் இன்றி இரத்த தானம்
செய்யலாம்.
இரத்ததானம்
செய்வதற்கான தகுதிகள்
வயது 17
முதல் 55 வரை. உடல் எடை
45 கிலோவுக்கு குறையாமல், எய்ட்ஸ், காமாலை, மலேரியா போன்ற
வியாதிகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
இரத்ததானம்
செய்பவரின் இரத்ததில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு மேல் இருக்க வேண்டும்.
இரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும்.
முன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம்
செய்யலாம்.
இரத்ததானம்
செய்ய 20-30 நிமிடங்களே ஆகும்.
இரத்ததானம்
செய்தவுடன் வழக்கம் போல் அன்றாட
வேலைகளை மேற்கொள்ளலாம்.
இரத்த தானம் அளிப்போர் அடையும்
நன்மைகள்
இரத்தப்
பிரிவு, இரத்தத்தில் மஞ்சள் காமாலை, மலேரியா,
பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ்
கிருமிகள் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டு
இரத்த தானமளிப்பவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
இரத்ததானம்
செய்வதால் இரத்த அழுத்தம் குறைகிறது.
இதனால் மாரடைப்பு நோய் வராமல் தடுக்கப்படுகிறது.
இரத்த வங்கி
தானம் பெறப்பட்ட இரத்தத்தை சேமித்து வைப்பதற்காக அரசு மருத்துவமனைகள், அரசால்
அனுமதிக்கப்பட்ட தனியார் அமைப்புகள் மூலம்
இரத்த வங்கிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இரத்தத்தில்
A, B, AB, O மற்றும் அதில் பாஸிட்டிவ் நெகடிவ்
ஆகிய உட்பிரிவுகள் உள்ளன. [இரத்தத்தின் பிரிவுகளை
கண்டுபிடித்தவர் கார்ல் லாண்ட்ஸ்டீனர். அவர்
பிறந்த ஜூன் 14ம் தேதி
தான் இரத்த தான நாளாக
கடைபிடிக்கப்படுகிறது].
இரத்ததானம்
செய்யும் போது கவனிக்கவேண்டிய சில
குறிப்புகள்
இரத்ததானம்
கொடுப்பதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்னர்
நன்றாக சாப்பிடுதல் வேண்டும்.
இரத்ததானம்
அளித்தப்பின் வழங்கப்படும் சிற்றுணவுகளை சாப்பிடுதல் மிகவும் முக்கியமானது. அதன்
பிறகு நன்றாக உணவருந்துதல் வேண்டும்.
இரத்ததானமளிக்கும்
நாளில் புகைப்பிடித்தலை தவிர்க்கவும். தானமளித்த 3 மணி நேரத்திற்குபிறகு புகைப்பிடிக்கலாம்.
இரத்ததானம்
அளிப்பதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு நீங்கள் மது
அருந்தியிருந்தால் இரத்ததானம் செய்வதற்கு அனுமத்திக்கப்பட மாட்டீர்கள்
இரத்தம்
பற்றிய உண்மைகள்
இரத்தம்
என்பது உயிரை பாதுகாக்கும் திரவம்.
இது உடலிலுள்ள இதயம், தமனிகள், சிரைகள்
மற்றும் தந்துகிகள் மூலமாக உடலில் சுழற்சி
செய்கிறது.
இரத்தம்
நமது உடம்பிற்கு உணவு, தாதுஉப்புகள், ஹார்மோன்கள்,
உயிர்சத்துகள் எனப்படும் வைட்டமின்கள், எதிர்உயிரி மருந்துகள், வெப்பம் மற்றும் ஆக்ஸிஜன்
போன்றவற்றை எடுத்துச்செல்கிறது.
இரத்தம்
உடலிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்கள் மற்றும் கரிமில வாயுவை
எடுத்துச்செல்கிறது.
இரத்தம்
நோய்தொற்றுக்கு எதிராக போராடுவதோடு மட்டுமல்லாமல்,
காயங்களை ஆறவைக்கவும் உதவுகிறது. உங்களுடைய உடலை ஆரோக்யமாக வைத்திருக்கிறது.
உங்களுடைய
உடல் எடையில் 7 சதவிகிதம் இரத்தமாக இருக்கிறது. புதிதாக பிறந்த குழந்தையின்
உடலில் ஒரு கிண்ணம் அளவுள்ள
இரத்தம் இருக்கும்
இரத்த வெள்ளையணுக்கள் கிருமிகளின் தொற்றினை எதிர்க்கும் முதன்மை நோய் எதிரியாகும்.
கிரோனுலோஸைட்ஸ்
என்ற ஒருவகை இரத்த வெள்ளையணுக்கள்,
இரத்த நாள சுவர் மீது
உருண்டு பாக்டீரியாக்களை தேடி அழிக்கிறது.
இரத்த சிவப்பணுக்கள் உடலிலுள்ள உறுப்புகளுக்கும், திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச்செல்கிறது.
இரண்டு மூன்று சொட்டு இரத்ததில்
காணப்படும் சுமார் ஒரு பில்லியன்
இரத்த சிவப்பணுக்கள் இருக்கும்
இரத்த சிவப்பணுக்கள் சுமார் 120 நாட்கள் இரத்த ஒட்ட
மண்டலத்தில் உயிருடன் இருக்கும்
இரத்த தகடுகள் இரத்த உறைதலுக்கு
உதவிப்புரிந்து லுகீமீயா மற்றும் இதர புற்றுநோய்களால்
பாதிக்கபட்டவர்களுக்கு வாழ்வதற்கு ஒரு வாய்ப்பினை வழங்குகிறது
இரத்த தானம் ஏன் செய்யவேண்டும்?
இரத்தம்
ஒரு உயிரோட்ட திரவம், எல்லா உயிர்களும்
இதனைச் சார்ந்த்தே. இரத்தமானது 60% திரவ பொருளாலும் 40% திட
பொருளாலும் ஆனது. திரவபொருள் பிளாஸ்மா
என்றழைக்கப்படுகிறது. இது 90% நீராலும் 10% உணவுப்பொருள்,
ஹார்மோன்கள் மற்றும் இதர பொருட்களாலும்
ஆனது. இரத்தம் எளிதில் உணவு
மற்றும் மருந்துகளால் நிரப்பிக்கொள்ளும். ஆனால் இரத்தத்தின் திடப்பகுதிகளான
இரத்த சிவப்பணுக்கள், இரத்த வெள்ளையணுக்கள் மற்றும்
இரத்த தகடுகள் போன்றவைகள் இறந்தால்
மீண்டும் உருவாக்க நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளும்
இப்படியாக
உள்ள நீங்கள், ஒரு நோயாளிக்கு இரத்தமாற்றம்
செய்ய எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம், அவர்களின் உயிரைவிட
விலைமதிப்பு மிக்கதாகிறது.
சில சமயங்களில் நம்முடைய உடல் இரத்த பரிமாற்றத்திற்கு
ஏற்றதாக இல்லாமல்கூட இருக்கலாம்.
நீங்கள்
அறிந்த்து போலவே இரத்த்தை அறுவடை
செய்யமுடியாது, தானத்தால் மட்டுமே வழங்க முடியும்.
ஆகவே, இரத்தம் தேவைப்படும் நபருக்கு
இரத்ததானம் அளிப்பதன் மூலம் ஒரு உயிரை
காப்பாற்ற முடியும்.
இந்தியாவில்
ஒவ்வொரு வருடமும் 250CC அளவுடைய 40 கோடி யூனிட்டுகள் இரத்தம்
தேவைப்படுகிறது. ஆனால் 5,00,000 யூனிட்டுகள் மட்டுமே தானமாக கிடைக்கிறது.
“மனித நேயத்தை சொற்களால்
அல்ல இரத்த தானத்தால் வெளிப்படுத்துவோம்”
“குருதி தானம் செய்வோம்,
ஒரு உயிரை காப்பதில் நமது
பங்களிப்பை உறுதிசெய்வோம்”
“உதிரம் கொடுப்போம்! உயிர்கள்
காப்போம்!”
“தானத்தில் சிறந்தது இரத்ததானம்”
“மனித நேயமுடைய அன்புள்ளங்களால்
தான் இத்தகைய கொடைகளை அளிக்க
முடியும்”
Websites
http://muyarchi.org/
http://www.bharatbloodbank.com
www.indianblooddonors.com
www.jeevan.org
www.blooddonations.org
www.aabb.org
www.redcross.org
No comments:
Post a Comment