Welcome to Pasumai Nallur

நம்ம ஊரு செய்தி [7 Dec 2011]

பயிற்சி முகாம்

திருப்பூர்:மத்திய தொழிலாளர் கல்வி வாரியம், தெற்கு ரோட்டரி கிளப், ஆர்.சி.சி., இணைந்து தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் குறித்து பயிற்சி முகாம் நடத்தின.

கணக்கம்பாளையத்தில் நடந்த பயிற்சி முகாமில் 80க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மத்திய தொழில் கல்வி வாரிய பயிற்சியாளர் வனராஜ் பயிற்சி அளித்தார்.

பயிற்சி பெற்றவர்களில் 50 பேர் தையல் பயிற்சி, பாக்குமட்டை தயாரித்தல், மெழுகுவர்த்தி தயாரித்தல், சோப் பவுடர் தயாரித்தல் ஆகிய இலவச பயிற்சிக்காக தேர்வு செய்யப்பட்டனர். தெற்கு ரோட்டரி தலைவர் சண்முகம், செயலாளர் ஜோதிமணி, கணக்கம்பாளையம் ஊராட்சி தலைவர் லட்சுமி, ஆர்.சி.சி., தலைவர் கதிர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கொசு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: சுகாதாரத்துறை ஏற்பாடு

உடுமலை:அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி உடுமலை பகுதி பள்ளிகளில் நடந்தது.திருப்பூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ரகுபதி அறிவுறுத்தலின் படி, எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கிராமங்களில், கொசுப்புழு மற்றும் கொசு ஒழிப்புப்
பணிகள் நடைபெறுகிறது.

இதன் மூலம் டெங்கு, சிக்-குன்-குன்யா, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தொடர்ந்து, ஜல்லிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உதவியுடன் தினைக்குளத்தில், கொசுப்புழு மற்றும் கொசு ஒழிப்புப் பணி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில், "மாணவர்களுக்கு கொசு உற்பத்தியாகும் விதம், கொசுவினால், பரவும் நோய்கள், கொசுவை கட்டுப்படுத்தும் முறைகள், டெங்கு, சிக்-குன்-குன்யா, மலேரியா காய்ச்சல் நோய் பரவும் முறைகள் குறித்து எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் பேசினார்.

நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு

உடுமலை வட்டாரத்தில் தோட்டக்கலைத்துறை சார்பில் மானியத்தில் நுண்ணீர் பாசனத்திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உடுமலை வட்டாரத்தில் பல வித தோட்டக்கலைப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மா அடர் நடவு செய்யும் விவசாயிகளுக்கு துறை சார்பில் இரண்டு ஆண்டு பராமரிப்பு செலவும், பழுது போன இடத்தில் நடவு செய்ய இலவசமாக நாற்று வழங்கப்படுகிறது.களையெடுப்பில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வாக நுண்ணீர் பாசன முறை உள்ளது. இப்பாசன முறையை மாநிலம் முழுவதும் அதிகளவு செயல்படுத்த செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. உடுமலை வட்டாரத்தில் 307 எக்டர் பரப்பிற்கு தேவைப்படும் இடுபொருட்கள் 39.48 லட்ச ரூபாய் மதிப்பிற்கு வழங்கப்பட உள்ளது.மா அடர் நடவு 26 எக்டர்; கோ-கோ 50 எக்டர், வாழை திசு வளர்ப்பு 30 எக்டர்; மலர் சாகுபடி 14 எக்டர் மற்றும் மிளகாய் சாகுபடியில் 5 எக்டருக்கு இடுபொருட்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 16 எக்டர் பரப்பில் மாதிரி பண்ணைகள் அமைக்கப்பட உள்ளது. மா அடர் நடவு முதலாண்டு நட்ட பயனாளிகளுக்கு 22 எக்டர் பரப்பு அளவிற்கு இரண்டாம் ஆண்டும் மானியம் வழங்கப்படுகிறது. இரண்டாம் ஆண்டு பராமரித்து கோ-கோ பயிருக்கு 47.5 எக்டர் பரப்பில் நடவு செய்யலாம்.

விவசாயிகளுக்கு தொழில் நுட்ப ஆலோசனைகளை தர 4 உதவி வேளாண் அலுவலர் மற்றும் ஒரு தோட்டக்கலை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் கன்றுகள் மற்றும் விதைகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் அடங்கல், கம்ப்யூட்டர் சிட்டா ஒரிஜினல், 2 புகைப்படம், ரேஷன்கார்டு ஜெராக்ஸ், பாங்க் பாஸ் புக் நகல், விண்ணப்பம் மற்றும் மண் ஆய்வு செய்து அதன் அறிக்கைகள் மற்றும் பயிர் நடவு போட்டோ இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.ஒவ்வொரு விவசாயிக்கும் தேவையான கன்றுகள் மற்றும் இடுபொருட்கள் களப்பணியாளர்களால் வயல் ஆய்வு செய்து உயர் அலுவலர் ஒப்புதல் பெற்று வழங்கப்படும். இதற்கான முன்னுரிமை பதிவேட்டில் விவசாயிகள் தங்கள் பெயரை உடனே பதிவு செய்ய வேண்டும். மேலும் சந்தேகங்களுக்கு 98420-07125 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


குளம், குட்டைகள் கணக்கெடுப்பு

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, குளம், குட்டை, ஏரிகளின் தற்போதைய நிலை குறித்து கணக்கெடுக்கும்படி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள், இப்பணியில் ஈடுபட உள்ளனர்.

கடந்த 2001ல் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க., நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்கும் நோக்குடன், வீடுகள், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியது. இதனால், மழைநீர் வீணாகாமல் நேராக நிலத்துக்குள் சென்று, நீர் ஆதாரங்களை பெருக்கியது.

பல நாள் தண்ணீரே பார்க்காத குட்டைகளில் மழை நீர் தேங்கியது. வீட்டு போர்வெல், விவசாயக் கிணறுகளில் தண்ணீர் பெருகியதால், இத்திட்டம் நல்ல வரவேற்பை பெற்றது. 2006ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., அத்திட்டத்தை கிடப்பில் போட்டது. புதிதாக வீடு கட்டுபவர்கள் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கின்றனரா என்ற கண்காணிப்பு மேற்கொள்ளாமல் விட்டது. இந்நிலையில், மீண்டும் பொறுப்பேற்றுள்ள அ.தி. மு.க., நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த உத்வேகத்துடன் செயல்பட துவங்கியுள்ளது. தற்போது, நகராட்சி, ஊராட்சி, கிராமப்புற பகுதி களில் உள்ள குளம், குட்டை உள்ளிட்ட நீர் ஆதாரங்களை கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளது.

வேளாண் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "நீர் ஆதாரங்களை மேம்படுத்த 620 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியை பயன்படுத்துவதற்காக அரசின் பதிவேட்டிலும், பதிவேட்டில் இல்லாமலும் (இயற்கையாக) உள்ள குளம், குட்டைகள்; அவற்றின் கொள்ளளவு; பதிவேட்டில் உள்ள சதுரடி அளவுக்கு உள்ளதா; ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதா? ஆக்கிரமிப்பு என்றால் யாரால்? குளம், குட்டை நிறைய வேண்டுமெனில், அதற்கான நீர் ஆதாரம் எங்கிருந்து வருகிறது. வாய்க்கால் மூலமா அல்லது மழை பெய்து நிரம்புமா என்று கணக்கெடுப்பு நடத்தும்படி கூறியுள் ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள், இப்பணியை மேற்கொண்டு வருகின்றனர்,' என்றார்.


அரசு நிலத்தில் ஒரு குச்சி கூட நடப்படக்கூடாது

"அரசு துறைகளுக்கு சொந்தமான இடங்களை பாதுகாக்கும் பொறுப்பு, அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உள்ளது. ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அரசு நிலங்களில் ஒரு குச்சி கூட நடப்படக்கூடாது,'' என கலெக்டர் மதிவாணன், அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் மதிவாணன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., கஜலட்சுமி, தனி துணை கலெக்டர்கள் சரஸ்வதி, கலைவாணி, ஆர்.டி.ஓ., செங்கோட்டையன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்க துணை தலைவர் பைச அகமது மற்றும் செயலாளர் ரங்கராஜன் ஆகியோர் அளித்த மனு:மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர் உதவி தொகை குறிப்பிட்ட தேதியில் வழங்க வேண்டும்; பண்டிகை காலங்களில் அவை முன்னதாக வழங்க வேண்டும். மூன்று சக்கர வாகனங்களை பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும். வேலை வாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்பு திட்டங்களில் மூன்று சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், என்று தெரிவித்துள்ளனர்.இந்து மக்கள் கட்சி சார்பில் அளித்த மனு: பல்லடம் அனுப்பட்டியில் தனியார் கார்பன் நிறு வனம் எந்த அனுமதியும் இல்லாமல் இயங்கி வருகிறது. மாசுக்கட்டுப்பாடு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 16 மாதங்களாக வெளியேறிய மாசு காரணமாக, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் கால்நடை உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அந்நிறுவனத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இரும்பு தொழிற்சாலைக்கு எதிர்ப்பு: கரடிவாவியில் தனியார் இரும்பு தொழிற்சாலை அமைய உள்ளது. அங்கு நிலத்தடி நீர் மற்றும் விவசாயம் பாதிக்கப்படும். அந்நிறுவனத்தை தடை செய்ய வேண்டும் என கரடிவாவி பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மேலும், ஊராட்சி தலைவர்கள் சாந்தி (பருவாய்), வீரம்மாள் (புளியம்பட்டி), கமலம் (க.அய்யம்பாளையம்), ஈஸ்வரன் (பணிக்கம்பட்டி), புவனேஸ்வரி (கோடங்கிபாளையம்) ஆகியோர் தனித்தனியே கோரிக்கை மனு அளித்தனர்.சத்யா நகரைச் சேர்ந்த 17 குடும்பத்தினர் அளித்த மனுவில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, காஸ் சிலிண்டர் இழந்த தங்களுக்கு, அதே இணைப்பில் புதிதாக காஸ் சிலிண்டர் வழங்க வேண்டும் எவ்று கோரியுள்ளனர்.கரைப்புதூர், பொன் நகர் மற்றும் காளிநாதம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டும், திருப்பூர் பெரியதோட்டம் 3 மற்றும் 5வது வீதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களுக்கு வெள்ள நிவாரணம் எதுவும் இது வரை வழங்கவில்லை; உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மனு அளித்தனர். அதிகாரிகள் ஆஜர்: கடந்த வாரம் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை. சில துறைகளில் அதிகாரிகளுக்கு பதிலாக ஊழியர்கள் வந்திருந்தனர். சில துறைகளில் இருந்து யாரும் வரவேயில்லை. இதையறிந்த கலெக்டர், அனைத்து துறை அதிகாரிகளும் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று கடுமையாக எச்சரித்தார். இதையடுத்து, நேற்று நடந்த கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். வழக்கத்தை விட, அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகளவில் காணப்பட்டது.கூட்டத்தில், கலெக்டர் மதிவாணன் பேசியதாவது:அவிநாசி தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்புகளை சில நாட்களுக்கு முன் அகற்றும்நடவடிக்கை மேற்கொண்டனர். அது, தற்போது கிடப்பில் போடப்பட்டு விட்டது. ஆக்கிரமிப்பை முறையாக அகற்ற வேண்டும். திடீர் ஆய்வு நடத்தப்படும். மற்ற துறை அதிகாரிகளும் தங்கள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் எந்த ஆக்கிரமிப்பும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். அரசு நிலத்தில் யாரும் ஒரு குச்சி கூட நடக்கூடாது. ஆக்கிரமிப்பு ஏற்பட்டால், அதற்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலர் பொறுப் பேற்க வேண்டும். அதேபோல், வேறு பயன்பாட்டுக்கும் வழி தரக்கூடாது. அண்மையில், திருப்பூரில் புறம்போக்கு நிலத்தில் அரசு கட்டடம் கட்டி, தற்போது இடிக்கப்பட்டு, அதற்கான தொகையை சம்பந்தப்பட்டவர்கள் திரும்ப செலுத்தியது அனைவருக்கும் தெரியும். நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும், என்றார்.

நெல்லிக்காய் பொருள் தயாரிப்பு பயிற்சி
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் சார்பில், மதிப்பூட்டப்பட்ட நெல்லிக்காய் பொருள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை:மதிப்பூட்டப்பட்ட நெல்லிக்காய் பொருட்கள் தயாரித்தல் பற்றிய பயிற்சி, வரும் 14, 15 ஆகிய தேதிகளில் அளிக்கப்படுகிறது. இதில், நெல்லிக்காய் கலவை பானங்கள், சர்க்கரை பாகு, கேண்டி மிட்டாய் மற்றும் துருவல் தயாரித்தல் குறித்து பயிற்சியுடன், தயாரித்த பொருட்களை சுகாதாரமான முறையில் அடைத்தல், தொழில் துவங்குவதற்கான உரிமம் பெறுவது குறித்த வழிமுறைகளும் கற்றுக் கொடுக்கப்படும். தயாரித்த பொருட்களை விற்பனை செய்தல், தொழில் துவங்குவதற்கு வங்கி கடன் வசதி பெறுவது குறித்த விளக்க உரைகள் மற்றும் இது சார்ந்த தொழில்நுட்பங்களும் இப்பயிற்சியில் கற்றுத் தரப்படும்.

இப்பயிற்சியில் சேர விரும்புவோர், 1,000 ரூபாய் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்ளலாம். நேரில் வர இயலாதவர்கள் பயிற்சி கட்டண தொகையை முதன்மையர், வேளாண் பொறியியல் கல்லூரி என்ற பெயருக்கு வரைவோலை எடுத்து, பாரத ஸ்டேட் வங்கியில் பெறத்தக்க வகையில், பேராசிரியர் மற்றும் தலைவர் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோவை- 641003 என்ற முகவரிக்கு வரும் 13ம் தேதிக்குள் அனுப்பவும். விபரங்களுக்கு 0422-6611340, 6611268 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


மேற்கு தொடர்ச்சி மலையில் வனத்தை பாதுகாப்பது ஒருங்கிணைந்து அனைவரும் செயல்பட வலியுறுத்தல்

இயற்கை வளம் மாசுபடாமல் பாதுகாத்தால் தான் சுகாதாரமாக வாழ முடியும். இதற்கு வனத்தை காக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகத்தில் வன வளம் நிறைந்துள்ளன.இயற்கை வளம் நிறைந்த காடுகள் இருப்பதால் தான் பல்வேறு வகையான உயிரினங்கள், ஓடைகள், நதிகள், நீர்தேக்கங்கள் உள் ளன. எல்லா உயிர்களும் இருந்தால் தான் மனிதர்கள் உயிர்வாழ முடியும். குறிப்பாக ஒரு மரத்திற்கும், பறவைக்கும் கூட உரிமை உண்டு. இயற்கை வளம் மாசுபடாமல் பாதுகாத்தால் தான் சுகாதாரமாக வாழ முடியும்.மேற்கு தொடர்ச்சி மலையில் 172 வகையான தாவரங்கள் உள்ளன. இதில் 40 வகையான கீரைகள் இடம் பெற்றுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலை இல்லாவிட்டால் தென்மாநிலங்கள் பாலைவனமாக மாறிவிடும் சூழ்நிலை உள்ளது.றிப்பாக சோலைக்காடுகளில் உள்ள ஈட்டி, பலா,தேக்கு, யூக்காலிப்டஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்கள் அனைத்தும் தனித்துவம் வாய்ந்ததாகும். வால்பாறையை பொறுத்த வரை சமீபகாலமாக சோலைக்காடுகள் அழிக்கப்பட்டு காபி, தேயிலை பயிரிடப்பட்டுள்ளதால் வனவிலங்குகளுக்கு பாதுகாப்பற்ற நிலை நீடித்து வருகிறது.இயற்கை வளம் அழிந்து போகாமல் இருக்க மரம் வெட்டுவதை தடுக்க வேண்டும். காடுகளை காப்பாற்றினால் தான் வனவிலங்குகள், மரங்கள், பறவைகள், அரிய வகை வனவிலங்குகள் பாதுகாப்பாக இருக்கும். மனிதர்களின் கால்தடம் பதியாமல் இருந்தால், அந்தப்பகுதி விரைவில் சோலைவனமாகிவிடும்.வளமான காடுகளை அழித்து தேயிலை, காபி போன்ற தோட்டப்பயிர்கள் பயிரிடுவதை தவிர்க்க வேண்டும். நம்முடைய பொருட்கள் எதுவும் வனப்பகுதியில் விட்டுவிட்டு வரக்கூடாது. குறிப்பாக நாம் அதிக அளவில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பையினால் வனவிலங்குகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.இயற்கை ஆர்வலர் ஓசை காளிதாசிடம் கேட்ட போது,"மேற்கு தொடர்ச்சி மலை மிக உள்சூழல்மண்டலமாகும். இங்குள்ள காடுகள் உலகம் வெப்பமயமாதலை தடுக்க பெரும் பங்கு வகிக்கிறது. குறிப்பாக வால்பாறையில் உள்ள காடுகள் அனைத்தும் பசுமை மாறாக்காடுகளாகும். இந்த காடுகளால் தான் பூமியில் ஆக்சிஜன் உற்பத்தி பெருகும். பரம்பிக்குளம் பாசனத்திட்டத்தின் தாய்மடியாக பசுமை மாறாக்காடுகள் உள்ளன. காடுகளை காப்பாற்றினால் தான் உலகம் வெப்பமயமாதலை தடுக்க முடியும்,' என்றார்.அழகு கொஞ்சும் அக்காமலை கிராஸ்ஹில்ஸ்: மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள வால்பாறை அக்காமலை கிராஸ் ஹில்ஸ் மத்திய அரசால் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டு, வனத்துறையினரால் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.இந்தப்பகுதியில் உலகின் அரிய வகை வனவிலங்குகளான சிங்கவால்குரங்குகள், வரையாடுகள் காட்டுயானை, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள், பறவைகள், நீர்வீழ்ச்சிகள், பசுமையான புல்வெளிகள் நிறைந்த பகுதியான கிராஸ் ஹில்ஸ் பகுதியில் சோலைகள் அதிக அளவில் உள்ளன.சுற்றுலாப்பயணிகள் இந்தப்பகுதியை பார்க்க அனுமதி இல்லாததால், இங்குள்ள உயிரினங்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் உள்ளன

உபயம் : Dinamalar.com

No comments:

Post a Comment