Welcome to Pasumai Nallur

பர்த்டே அல்ல பிறந்தநாள் விழா


தமிழரின் பாரம்பரியத்தை நம் வீட்டு குழந்தைகளின் பிறந்தநாள்விழா முலமாக பாதுகாப்பது எப்படி என எழதுவது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஏனெனில் இப்போது எல்லாம் கதர் ஆடை அணிவதும், தமிழில் எழதுவதும், பேசுவதும் கூட நமது ஊர்களில் காணாததைகண்ட புதுமை காட்சியாய் போய்விட்டது. 
எந்த ஒரு மனிதசமுகம் தன்மொழியையும், பாரம்பரிய பழக்கவழக்கங்ககளையும் மறக்கிறதோ அந்த நொடியே அதன் அழிவு ஆரம்பமமாகி அந்தசமுகம் கூடியவிரைவில் மண்ணுடன் மண்ணாய் மறைந்துவிடும் (மூடபழக்கவழக்கங்கள் இந்த தொகுப்பில் வரா, பலர் அதைத்தான் பாரம்பரியமாக பின்பற்றுகிறார்கள்). அப்படி நடவாமல் இருக்க எடுக்கும் சிறுமுயற்சிதான் இது.

பசுமைநல்லூர் சார்பாக கொண்டாடப்பட்ட "பாரம்பரியம் காக்கும் பிறந்தநாள்" விழாவினை பற்றி விரிவாக காண்போம்

௧) தேன்தமிழில் வரவேற்பு மடல் மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதத்தில் அச்சடித்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டது.
௨) விழாவிற்கு வந்த அனைவரும் பாரம்பரிய உடை அணிந்து வந்திருந்தனர்.
௩) குழந்தையின் பெற்றோர் புன்னகையுடன் இருகரம்கூப்பி வணக்கம் தெரிவித்து வரவேற்றனர்
௪) பெற்றோரும், மற்றோரும் குழந்தையை போற்றி, வாழ்த்தி தமிழில் கவிதை எழுதினர்.
௫) அரசியல்வாதிகள்போல சுவரோட்டிகளை ஒட்டாமல் திருக்குறளையும், பாரதி மற்றும் பாரதிதாசனின் வரிகளை மணிமணியாய் வருவோர் கண்களில் படும்படி வைக்கபட்டது.
௬) வந்தோர் அனைவரும் சர்க்கரை தண்ணிபோல் காபி/ டீ அருந்தாமல் சுக்கு, கருப்பட்டியை சுடுநீரில் கலந்து இதமாக, நலமான பானம் அருந்த கொடுக்கபட்டது.
௭) மனிதகுலம் வாழ, மிளிர குழந்தையும், குதுகுலமான குடும்பத்துடன் குத்துவிளக்கு ஏற்றி விழா தொடங்கிவைக்கப்பட்டது.
௮) இருவழி தாத்தா, பாட்டிகளும் (அம்மத்தா, அப்பிச்சி, அப்பத்தா, அப்பாரு) குழந்தை-இன் உட்சிகுளிர முத்தமிட்டு வாழ்த்தச்சொல்லினர்.
௯) கேக்கு வெட்டி கலர்கலராய் மிட்டாய் கொடுப்பத்தை தவிர்த்து பருப்பு, தானியங்கள் கலந்த இனியமாவு இனிப்பாக கொடுக்கபட்டது.
௰) சினிமா குத்துப்பாட்டு தவிர்த்து மகிழ்ச்சிதரும் சிறார்களின் பாடல்களும் மற்றும் பாரதியின் பாடல்க ளும்  காற்றில் தவழ விடப்பட்டது.
௧௧) அழைக்கப்பட்ட நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் தங்கள் கைபேசிக்கு முழுவதுமாக கைவிலங்கு அளித்துவிட்டு குழந்தையின் கள்ளகபடம் அற்ற குருகுருப்பான பேச்சில் மயங்கி, கொஞ்சி பேசி விளையாடினர்.
௧௨) ஊக்கம் ஊட்டும் புன்னகையும், புத்தகங்களையும் மட்டும் பரிசாக குழந்தைக்கு பரிசாக கொடுக்கப்பட்டது.
௧௩) குழந்தையின் பிஞ்சுகையால் பலதலைமுறை வாழும் மரகன்றுகள் நடப்பட்டது.
௧௪) மேலும் விருந்தினருக்கு எண்ணற்ற நட்பையும், உறவையும் மேம்படுத்தும் சுலபமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
௧௫) வந்தர விருந்தினருக்கு மரகன்றுகளை மற்றும் சுற்றுசூழல் காக்க உதவும் துணிபைகளில் கொடுக்கப்பட்டது.

உணவு
௧) கச்சாயமும், கல்லைஉருண்டையும் இனிப்பாகக்கொடுக்கப்பட்டது.
௨) அன்றுகறந்த மாடு/ ஆட்டு பாலில், சர்க்கரை கலக்காமல் வெதுவெதுப்பாகக் கொடுக்கப்பட்டது.
௩) பாசிப்பயிர் கடைந்து களிசாதத்துடன் சாப்பிடக்கொடுக்கப்பட்டது.
௪)அரசிமுருக்கையும், முருங்கைகாயையும், எண்ணெய்படாமல் வருத்த கீரையுடன் அத்துடன் கடிக்கக்கொடுக்கப்பட்டது..
௫)மற்றும்  உடலுக்கு மிகவும் நல்ல பலவகையான பாரம்பரியஉணவுகளான சோள/கம்பு தோசை, ராகிசேவை, மக்காசோள பணியாரம், கம்பு தயிர்சாதமும் கொடுக்கப்பட்டது.
௬) நல்லதொரு பானமான மோரும், இளநீரும் அருந்தகொடுக்கப்பட்டது.



இந்தமாதிரி சிறுசிறு முயற்சிகள்தான் நாளைய சமூகத்திற்கு அடித்தளம். உங்கள் வீடுகளில் இது போன்று நடத்த உதவி வேண்டுமா? பசுமைநல்லூரை தொடர்பு கொள்ளுங்கள் (0-98432-32229/0-99436-32229 மற்றும் pasumainallur@gmail.com)





No comments:

Post a Comment