“நீரின்றி அமையா உலகு” என்று அனைவருக்கும் தண்ணீரின் அருமை தெரியும். முன்பு “தண்ணீர் விலைக்கு விற்கப்படுகிறது” என செய்தி வந்தால் அது ஒரு விசித்திரமான நிகழ்வாக இருக்கும்.
ஆனால் தற்போது நிலைமயே வேறு, தண்ணீர் விலைக்கு வாங்கும் நிலைக்கு உட்பட்டுஉள்ளோம். ஆயினும் நம்மிடையே தண்ணீரைப் ஏதாவது விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறதா என யோசித்தால் வாயளவில்தான் உள்ளது. தண்ணீர் எத்தனையோ கிராமப்புற மக்களுக்கு கிடைக்காத நிலை இருக்கிறது. விரைவிலேயே தண்ணீருக்காகவும்,பெட்ரொலுக்காகவும் போர்கள் ஏற்படும் அபாயம் காத்துள்ளது.பெட்ரோலை இப்போது நாம் தினம் ,தினம் லட்சக்கணக்கான பீப்பாய்கள் எடுத்து பூமியை வெற்றுரு்ண்டையாக்கி வருகிறோம்.அதேபோல் லாரி,லாரியாக தண்ணீரை எடுத்து நிலத்தடி நீர்சேமிப்பையே இல்லாமல் ஆக்கிவருகிறோம்.
சர்வதேச தண்ணீர் மேலாண்மை நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், “உலக தட்பவெப்ப மாற்றம் மற்றும் உள்நாட்டு மக்கள்
தொகை பெருக்கம் ஆகிய காரணங்களால் இந்தியா தண்ணீர் பற்றாக்குறையை சந்திக்கும். இது, அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய மற்றும்
எதிர்பாராத அளவிற்கு உணவு பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையை
ஏற்படுத்தும்.இந்தியாவிற்கு 700 பில்லியன் கியூபிக் மீட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில், 85 சதவீதம் உணவு உற்பத்திக்கு
பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இந்த தேவை 2030ம் ஆண்டில், மக்கள் தொகை அதிகரிப்பால், இரண்டு மடங்காக அதிகரிக்கும். 2030ம் ஆண்டில், இந்தியாவின் மக்கள் தொகை, 120 கோடியில் இருந்து 160 கோடி அல்லது 170 கோடியாக அதிகரிக்கும்.
அதேபோல், தண்ணீர் தேவையும், இருமடங்கு, அதாவது 1,498 பில்லியன் கியூபிக் மீட்டராக அதிகரிக்கும். ஆனால், தண்ணீர் அளிப்பு 744 மில்லியன் கியூபிக் லிட்டர்களாக இருக்கும். தேவையில்
பாதியளவு பற்றாக்குறையாக இருக்கும்’ என்பது தெரிய வந்துள்ளது.
குளம்,குட்டை போன்ற நீர்சேமிப்பு ஆதாரங்களையும் பட்ட போட்டு கான்கீரிட் காடுகளாக ,குடியிருப்பு மேடுகளாக ஆக்கிவருகிறோம். விவசாய நிலங்களைக்கூட விட்டு வைக்காமல் வேளாண்பரப்பையே சுருக்கி விட்டோம். முன்ப வீடுகளைச் சுற்றி மரங்கள்,செடிகள் வளர்ப்பார்கள். மணல் இருப்பதால் மழை நீர் சேகரிக்கப் படும். இப்போதோ கொஞ்சம் இடம் இருந்தால் கடை,வீடு அல்லது வீட்டைச் சுற்றி கான்கிரீட் போட்டு மெழுகி விடுகிறார்கள்.ஒரு சொட்டு மழை நீர் கூட கீழே பூமிக்குச் செல்லவிடாமல் செய்து விடுகிறார்கள்.பின் எப்படி மழை நீர் சேகரிப்பு ஏற்படும்.
தண்ணீர் சேமிப்பு முறைகளைக் கையாளவில்லையென்றால் எதிர்காலத்தில் நம் பிள்ளைகள்தான் பாதிக்கப்படுவர். வீடுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் 50 விழுக்காடு குளியலுக்கும், சமையல் அறையில் கழுவுவதற்கும் செலவிடப்படுகிறது. பெட்ரோலை நாம் மீண்டும் பூமியில் ச்ந்கரிக்க முடியாது.அது இயற்கை பல்லாண்டுகளாக பல்வேறு நிலைகளில் உருவாக்கியது.ஆனால் தண்ணீரை நாம் சேகரிக்க இயலும். ஆகையால் குழந்தைகளுக்கு தண்ணீர் சேமிப்பைப்பற்றி அவசியம் அனைத்துப்பள்ளிகளிலும்,
வீட்டில் பெற்றோர்களும் சொல்லித்தரவேண்டும்.
அனைத்து கிராமங்கள்,
குடியிருப்புகள்,
நகரங்கள், புறநகர்ப்பகுதிகளிலும் நிலத்தடி நீர்வளத்தை பெருக்குதற்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும். நகரமயமாக்கலால்,
குளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குளங்களும் அழிந்து வரும் நிலை உள்ளது. குளங்களை முறையாக பராமரிக்காவிட்டால் பற்றாக்குறை அதிகரிக்கும். ஒரு குளம் முறையாக பராமரிக்கப்படுவதால்,
ஒரு கி.மீ., தூரத்தில்,
300 கிணறுகளில் தண்ணீர் வரத்து தொடர்ந்து இருக்கும். தண்ணீர் வளத்தை அதிகரிக்க,
கிராமப்பகுதிகளில் உள்ள குளங்களை தூர்வாரி பராமரிக்க வேண்டும்.
சொட்டு நீர் பாசனத்தை பின்பற்றும்போது 40 சதவீத தண்ணீரை மிச்சப்படுத்தலாம்;
மகசூலும் கணிசமாக அதிகரிக்கும்.
No comments:
Post a Comment