காடு, தோட்ட வரப்பு தாண்டி கணிதம் கற்ற பள்ளி நினைவுகள் ஞாபகம் உள்ளதா?
மின்சாரம் இல்லாமல் மண்ணெண்ணெய் விளக்கேற்றி மனனம் செய்த பள்ளி நினைவுகள் ஞாபகம் உள்ளதா?
கருப்புவெள்ளை டிவி-ல் படம் பார்த்து பாடம் மறந்த பள்ளி நினைவுகள் ஞாபகம் உள்ளதா?
அம்மா கோடுத்த எட்டு அணாவில், நாலு அணா சேமித்த பள்ளி நினைவுகள் ஞாபகம் உள்ளதா?
கை நிறைய எண்ணெய் ஊற்றி, தலைவாரி புகைப்படம் எடுத்துகொண்ட பள்ளி நினைவுகள் ஞாபகம் உள்ளதா?
பள்ளிவிட்டு வரும்போது பெய்த மழையில் நனைந்த பள்ளி நினைவுகள் ஞாபகம் உள்ளதா?
தேர்வு வரும்பொழுது எல்லாம் நல்லமதிப்பெண் சாமி கும்பிட்ட பள்ளி நினைவுகள் ஞாபகம் உள்ளதா?
தேர்வு முடிந்தபின்உற்றார், உறவினர் வீடு செல்ல காத்திருந்த பள்ளி நினைவுகள் ஞாபகம் உள்ளதா?
இப்படிபட்ட நினைவுகளை சுமந்திருக்கும் நாம் படித்த பள்ளியை ஞாபகம் உள்ளதா?
இனிமேல் நேரம் கிடைத்தால் நாம் பயின்ற தொடக்கபள்ளிக்கு சென்று வாருங்கள்!
பசுமைநல்லுரையும் , எதிர்காலஉலகையும் உருவாக்கும் கபடமற்ற கண்மணிகள் அங்குதான்
நம் வரவையும், ஊட்குவிப்பயும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன!!!
ஆம் பசுமைநல்லுரையும் , எதிர்காலஉலகையும் உருவாக்கும் கபடமற்ற கண்மணிகள் அங்குதான்
நம் வரவையும், ஊட்குவிப்பயும் எதிர்பார்த்து காத்திருக்கின்றன!!!
No comments:
Post a Comment