துளசியை எந்த முறையில் உட்கொண்டாலும்
அது உடலின்
ஆரோக்கியத்தைக் காக்கிறது. சக்தியை அளிக்கிறது. நோயை
எதிர்க்கும் ஆற்றலையும், நோயை
குணப் படுத்தும் ஆற்றலையும், நோயில் இருந்து காக்கும் ஆற்றலையும் துளசித்
தேநீர் தருகிறது.
துளிசியைக் கொண்டு
தேநீர் தயாரித்துக்
குடிக்கும் பழக்கம் பலருக்கும் உண்டு. இந்த
துளசித் தேநீர் வெறும்
உற்சாக த்தையும், நல்ல
வாசனையையும் மட்டும் அளிக்கவில்லை. உடலுக்கு ஆரோக்
கியத்தையும், நோயில் இருந்து காப்பா
ற்றுவதற்கான சக்தியையும் அளிக்கிறது.
துளசி இலைகளை நிழலில் உலர்த்தி
எடுத்து அவற்றை
நீங்கள் போடும் தேநீரில் கூட
சேர்த்துக்
கொள்ளலாம். அல்லது கடைகளில் கிடைக்கும் க்ரீன் டீ
போன்றவற்றில் துளசி
சேர்த்ததை வாங்கி வந்து அருந்தலாம்.
துளசி இலைக்கு மன இறுக்கம்,
நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி
இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற
தொண்டை நோய் களை உடனுக்குடன்
குணமாக்கும் சக்தி உண்டு. துளசி
இலைச் சாறில் தேன், இஞ்சி
முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி
அருந் தலாம். சளி, இருமல்
உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை
மூன்று தேக்கரண்டி துளசி கஷாயத்தைக் கொடுத்தால்
போதும்.
வேறு பெயர்கள்: துழாய், திவ்யா, பிரியா,
துளவம், மாலலங்கல், விஷ்ணுபிரியா, பிருந்தா, கிருஷ்ணதுளசி, ஸ்ரீதுளசி, ராமதுளசி
இனங்கள்:
நல்துளசி, கருந்துளசி, செந்துளசி, கல்துளசி, முள்துளசி, நாய்துளசி (கஞ்சாங்கோரை, திருத்துழாய்), நிலத்துளசி, கல்துளசி, முள்துளசி என பல வகைகள்
உள்ளன.
தாவரப்பெயர்கள்:
துளசி (Ocimum sanctum) மூலிகைகளின் அரசியாக போற்றப் படுகிறது.Ocimum,
Sanctum, Linn Lamiaceae, Labiatae (Family)
வளரும் தன்மை: வடிகால் வசதியுள்ள
குறுமண் மற்றும் செம்மண், வண்டல்மண்,
களி கலந்த மணற்பாங்கான இருமண்,
பாட்டு நிலம் தேவை. கற்பூரமணம்
பொருந்திய இலைகளையும் கதிராக வளர்ந்த பூங்கொத்துகளையும்
உடைய சிறுசெடி. துளசியை விதை மற்றும்
இளம் தண்டுக் குச்சிகள் மூலம்
பயிர் பெருக்கம் செய்யலாம். மண்ணில் கார அமில
நிலை 6.5 - 7.5 வரை இருக்கலாம். வெப்பம்
25 டிகிரி முதல் 35 டிரிகி.
பயன் தரும் பாகங்கள்: இலை,
தண்டு, பூ, வேர் அனைத்துப்
பகுதிகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை.
துளசி ஒரு சிறந்த ஆன்டிபயாடிக்
உடலில் உள்ள தீமை தரும்
கிருமிகளை, நுண்ணுயிர்களை அழிக்கும் ஆற்றலுள்ளது துளசி. துளசியின் ஆன்டிபயாடிக்
குணத்தை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்க நாட்டு
மருத்துவர்கள் அறிந்திருந்தனர் என்பதை பல மருத்துவ
நூல்கள் கூறுகின்றன.
துளசிகுடிநீர்
முதல் நாள் இரவில் ஒரு
கைப்பிடி துளசி இலைகளை மூன்று
லிட்டர் தண்ணீரில் இட்டு வைக்கவும். மறுநாள்
காலையில் பத்து மணியிலிருந்து இந்த
துளசி குடிநீரை, நாள் முழுதும் வீட்டிலுள்ளோர்
அனைவரும், அவ்வப்போது பருகி வரவும். இதனால்
உணவு நன்கு ஜீரணம் ஏற்படும்.
பசி ருசி உண்டாகும். குடல்
அழற்சி நீங்கும். உடல் குளிர்ச்சி அடையும்.
உடற்சூடு கணிசமாகத் தணியும். மலச்சிக்கல் ஏற்படாது பாதுகாக்கும். சிறுகுடல், பெருங்குடல் பாதைகளிலுள்ள தீமை தரும் கிருமிகள்
அழியும். உடல் சோர்வு நீங்கி
புத்துணர்ச்சி வரும்.
துளசிபானம்
அரை கைப்பிடி துளசி இலைகளை நன்கு
சுத்தம் செய்து கழுவி இத்துடன்
நான்கு ஏலக்காய், சிறிதளவு பொடித்த சுக்கு, சித்தரத்தை,
கால் கிலோ கருப்பட்டி சேர்த்து
மூன்று லிட்டர் நீரிலிட்டு நன்கு
கொதிக்க வைத்து இறக்கவும். இது
துளசிபானம். இதைக்குடித்துவர காய்ச்சலுடன் கூடிய சளித்தொல்லை குணமாகும்.
ஆரம்பநிலை ஆஸ்துமா அகலும். இருமலைப்போக்கும்.
கல்லீரல் கோளாறுகளை நீக்கும். உடல் அசதி, சோர்வு
தீரும். சருமத்தில் ஏற்படும் அலர்ஜி குணமாகும்.
துளசி, சுக்கு, மிளகு கஷாயம்
ஒரு கைப்பிடி அளவு துளசி இலை,
சிறிது சுக்கு (பொடித்தது) இரண்டு
தேக்கரண்டி மிளகு இவைகளை போதிய
அளவு நீரிலிட்டு கஷாயம் செய்து வைத்துக்
கொள்ளவும். இதில் கால் தம்ளர்
அளவு, மூன்று வேளை குடித்துவர
நெஞ்சுச்சளி குணமாகும்.
துளசி சிரப்
இரண்டு கைப்பிடி அளவு துளசி இலை,
நான்கு ஏலக்காய் இவைகளை இரண்டு லிட்டர்
நீரில் போட்டு கொதிக்க வைத்து,
வடிகட்டி எடுக்கவும். இந்த சிரப்பை வேளைக்கு
மூன்று தேக்கரண்டி வீதம், தினம் காலை,
மாலையென இருவேளை குடித்துவர, நோய்
எதிர்ப்பு சக்தி உண்டாகும். கல்லீரல்
கோளாறுகளைக் குணப்படுத்தும். பித்தத்தை மொத்தமாய் போக்கும். சளித்தொல்லை, குற்றிருமலுக்கு இயற்கை மருந்து இது.
ஆரம்பநிலை இளைப்பு நோயைக்குணப்படுத்தும். தலை நீரேற்றம்,
தலைவலி இவைகளைத் தணிக்கும். .
- இது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, இருமல் போக
துளசி சாற்றுடன் சிறிது தேன் கலந்து
கொடுத்தால் குணமாகும்.
- உடம்பில்
ஏற்படுகின்ற கொப்புளங்களுக்கு துளசி இலையை நீர்விட்டு
அரைத்து பூசி வந்தால் அவை
எளிதில் குணமாகும்.
- சரும நோய்களுக்கு துளசி சாறு ஒரு
சிறந்த நிவாரணி.
- இலைகளைப்
பிட்டவியலாய் அவித்துப் பிழிந்து சாறு 5மி.லி.
காலை, மாலை சாப்பிட்டு வர
பசியை அதிகரிக்கும்.
- இதயம்
கல்லீரல் ஆகியவற்றை பலப்படுத்தும். சளியை அகற்றும், தாய்பாலை
மிகுக்கும்.
- இலை கதிர்களுடன் வாட்டி பிழிந்த சாறு
காலை மாலை 2 துளி வீதம்
காதில் விட்டு வர 10 நாட்களில்
காது மந்தம் தீரும்.
No comments:
Post a Comment